திருவண்ணாமலை தீபத் திருவிழா: 2,280 சிறப்பு பஸ்கள்!
ADDED :4365 days ago
திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு 6 கூடுதல் ரயில்கள், 2,280 சிறப்புப் பேருந்துகள் இயக்கத் திட்டமிட்டுள்ளது. கார்த்திகை தீபத் திருவிழா தொடர்பான 2-வது கட்ட ஆலோசனைக் கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது 2,280 சிறப்புப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறையினர் தெரிவித்தனர். இத்துடன், தீபத் திருவிழாவுக்கு 6 கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.