ஐயப்பசேவா சங்கம் நவரத்தின விழா
ADDED :4465 days ago
ஈரோடு மாவட்ட அகில பாரத ஐயப்பா சங்கத்தின், 25வது ஆண்டு நவரத்தின விழா, சத்தி ரோடு, வி.பி.வி., மஹால் திருமண மண்டபத்தில் அக்., 27ம் தேதி நடக்கிறது. இவ்விழாவில் இலவச வேஷ்டி, சேலை, புத்தகங்கள் வழங்குதல், புதிய கிளைகள் துவக்குதல், சான்றோர்கள் மற்றும் நவரத்தின விழாவுக்கு அன்னதானம் வழங்கியோருக்கு பாராட்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. அக்., 27ம் தேதி காலை, 9 மணிக்கு இச்சங்கத்தின், தமிழ் மாநில தலைவர் விஸ்வநாதன் இந்நிகழ்ச்சியை துவக்கி வைக்கிறார். தொடர்ந்து குத்துவிளக்கு ஏற்றுதல், ஐயப்பனுக்கு பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஈரோடு மாவட்ட தலைவர் விஷ்ணுராமன் தலைமை வகிக்கிறார். மாவட்ட செயலாளர் ரெங்கசாமி வரவேற்கிறார்.