உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்சி கோவில்களில் உண்டியல் திறப்பு!

திருச்சி கோவில்களில் உண்டியல் திறப்பு!

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் காணிக்கைகளை எண்ணும் பணி நேற்று கோவில் இணை ஆணையர் கல்யாணி,  முன்னிலையில் நடந்தது. கோவில் பணியாளர்களும், தொண்டு நிறுவனத்தினரும் இப்பணியில் ஈடுபட்டார்கள். இதில் ரூ.52 லட்சத்து 48 ஆயிரத்து 294 ரொக்கமும், 425 கிராம் தங்கம், 1012 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் இருந்தன.

சமயபுரம் : சமயபுரம் மாரியம்மன் கோவில்உண்டியல்களை  எண்ணும் பணி கோவில் மண்டபத்தில் மண்டல இணை ஆணையர் புகழேந்திரன், சமயபுரம் இணை ஆணையர் தென்னரசு, அரியலுர் உதவி ஆணையர் கோதண்டராமன், புதுக்கோட்டை உதவி ஆணையர் ஜெகநாதன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. காணிக்கை உண்டியல்களில் ரூ.41 லட்சத்து 30 ஆயிரத்து 79–ம், 2 கிலோ 11 கிராம் தங்கமும், 4 கிலோ 90 கிராம் வெள்ளியும் இருந்தன. வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் 52–ம் இருந்தது.

மலைக்கோட்டை கோவில்: திருச்சி மலைக்கோட்டை கோவிலில் மாணிக்க விநாயகர் சன்னதி, தாயுமான சுவாமி, மட்டுவார் குழலம்மை, உச்சிப்பிள்ளையார் சன்னதி, நந்தி கோவில் உள்ளிட்ட சுவாமிகள் சன்னதிகள் உள்ளன.இந்நிலையில் நேற்று காலை கோவிலில் உள்ள 27 உண்டியல்களை உதவி ஆணையர் (பொறுப்பு) ரத்தினவேல்பாண்டியன், புதுக்கோட்டை மாவட்ட இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையர் ஜெகநாதன் ஆகியோர் தலைமையில் உண்டியல்கள் திறந்து எண்ணும் பணி தொடங்கியது. இந்த பணியில் கோவில் பணியாளர்களுடன் பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகள் பலர் ஈடுபட்டனர். உண்டியல்களில் ரூ.16 லட்சத்து 85 ஆயிரத்து 507 ரூபாய் ரொக்கம், 11 கிராம் தங்கமும், 100 கிராம் வெள்ளியும், 700 வெளிநாட்டு கரன்சிகளும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !