கைலாசநாதர் கோபுரங்களுக்கு நவதானியங்கள் இடும் வைபவம்!
ADDED :4331 days ago
பூலாம்பட்டி: கைலாசநாதர் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி, கோபுரங்களில் நவதானியங்கள் போடும் வைபவம் நடைபெற்றது. இதில், அந்தப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்களும், பக்தர்களும் கலந்து கொண்டனர். புகழ்பெற்ற கைலாசநாதர் திருக்கோயிலில் திருப்பணிகள் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடந்த 4 மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வந்தன. இந்தப் பணிகள் முடிந்து, கும்பாபிஷேக விழா வருகிற 14ஆம் தேதி நடைபெற உள்ளது.