சோமநாத சுவாமி கோவில் தேரோட்டம்!
ADDED :4330 days ago
ஆத்தூர்: சோமசுந்தரி அம்மன் சமேத ஸ்ரீ சோமநாத சுவாமி திருக்கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இக்கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா அக். 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவில் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனை நடைபெற்றன. பின்னர் சுவாமி மற்றும் அம்பாள் தேரில் எழுந்தருள தேரோட்டம் நடைபெற்றது.