உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீனாட்சி அம்மன் கோயிலில் நவ.3ல் சஷ்டி விழா துவக்கம்!

மீனாட்சி அம்மன் கோயிலில் நவ.3ல் சஷ்டி விழா துவக்கம்!

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கந்த சஷ்டி விழா, நவ., 3 முதல் 8ம் தேதி வரை நடக்கிறது. இணை கமிஷனர் பொ.ஜெயராமன் அறிவிப்பு: தீபாவளியை முன்னிட்டு அன்று (நவ.,2) முழுவதும் அம்மனுக்கு வைரக்கீரிடம், தங்க கவசம், சொக்கநாதருக்கு வைர நெற்றிப்பட்டை சாத்துப்படி செய்யப்பட்டு சிறப்பு தரிசனம் செய்விக்கப்படும். சஷ்டி விழா: சஷ்டி விழா நவ., 3ல் துவங்குகிறது. விழாவை முன்னிட்டு தினமும் மாலை 6 மணிக்கு அம்மன் எழுந்தருளி ஆடி வீதிகளில் சுற்றி வந்த பின் மீனாட்சி நாயக்கர் மண்டபத்தில் பத்தியுலாத்தி பின் கொலுச்சாவடி சேத்தியாகும். நவ.,7ல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பஞ்சமூர்த்திகளுடன் ரிஷப வாகனத்தில் ஆடி வீதியில் புறப்பாடு ஆகும். நவ., 9ல் காலை 7 மணிக்கு முத்துக்குமாரசுவாமிக்கு வெள்ளிக்கவசம் (பாவாடை) சாத்துப்படியும் சிறப்பு அபிஷேகம், சண்முகார்ச்சனையும் நடக்கும். விழா ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் செய்து வருகின்றனர், என தெரிவித்துள்ளார். அழகர்கோவில் சோலைமலை மண்டபம் முருகன் கோயில் துணை கமிஷனர் தா.வரதராஜன் அறிவிப்பு: சஷ்டி விழா நவ., 3 முதல் 9ம் தேதி வரை நடக்கிறது. நவ., 3 காலை 9.50 மணிக்கு விக்னேஷ்வர பூஜையுடன் விழா துவங்குகிறது. காலை 10.45 மணிக்கு மேல் அன்னவாகன உலா, நவ., 4 காலை 9.30 மணிக்கு மேல் காமதேனு வாகன உலா, நவ., 5 காலை 9.30 மணிக்கு மேல் யானை வாகன உலா, நவ., 6 காலை 9.30 மணிக்கு மேல் ஆட்டுக்கிடா வாகன உலா, நவ., 7ல் ஆதிவேல் அலங்காரம், காலை 9.30 மணிக்கு மேல் சப்பரம் வாகன உலா, நவ.,8 காலை 10.30 மணிக்கு குதிரை வாகன உலா, மாலை 4.30 மணிக்கு பத்மாசூரணை சம்ஹாரம் செய்தல், சூரசம்ஹாரம் காட்சி, நவ., 9 காலை 10.40 முதல் 10.55 மணிக்குள் திருக்கல்யாணம் உற்சவம் நடக்கிறது. காலை 11.30 மணிக்கு பல்லக்கில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, தக்கார் வி.ஆர்.வெங்கடாசலம், துணை ஆணையர் செய்து வருகின்றனர், என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !