இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் விளக்குபூஜை!
ADDED :4329 days ago
சாத்தூர்: இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில், விளக்கு பூஜை நடந்தது. உலக மக்களின் நலன் , மழை பெய்ய வேண்டி நடந்த பூஜையில், இருக்கன்குடியை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர். ஊராட்சித்தலைவர் பவுன்ராஜ், கோயில் செயல்அலுவலர் தனபாலன், கோயில் பரம்பரை அறங்காவலர் குழுத்தலைவர் ராமமூர்த்திபூஜாரி முன்னிலை வகித்தனர். விளக்கு பூஜையை தொடர்ந்து, மாரியம்மனுக்கு பால், இளநீர், பன்னீர், மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகங்கள் செய்யப்பட்டன. இருக்கன்குடி இருகங்கை இளைஞர்கள் நற்பணி மன்றத்தின் சார்பில், குத்து விளக்குபூஜைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.