செங்கல்பட்டு யோக நாதேஸ்வரர் கோயிலில் சுப்ரமணிய சுவாமி திருக்கல்யாண உற்சவம்
ADDED :4392 days ago
செங்கல்பட்டு அண்ணா நகர் எல்லையம்மன் ஆலயம் மற்றும் ஸ்ரீயோக நாயகி உடனுறை யோக நாதேஸ்வரர் கோயிலில் ஸ்ரீ சிவ சுப்ரமண்ய சுவாமி திருக்கல்யாண உற்சவம் நவம்பர் 9-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி கந்தர் சஷ்டி விழா நவம்பர் 3-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருப்பரங்குன்றம், திங்கள்கிழமை திருச்செந்தூர், செவ்வாய்க்கிழமை பழனி, புதன்கிழமை சுவாமிமலை, வியாழக்கிழமை திருத்தணிகை, வெள்ளிக்கிழமை பழமுதிர்சோலை அலங்காரமும் நடைபெறவுள்ளது.