உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை கோயிலில் புதுப்பிக்கப்பட்ட முருகர் தேர்: நாளை வெள்ளோட்டம்

திருவண்ணாமலை கோயிலில் புதுப்பிக்கப்பட்ட முருகர் தேர்: நாளை வெள்ளோட்டம்

கடந்த ஆண்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது, முருகர் தேரில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து ரூ.26 லட்சம் செலவில் தேர் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்தது. இப் பணிகள் முடிவடைந்ததையடுத்து செவ்வாய்க்கிழமை (நவம்பர் 5) வெள்ளோட்டம் நடத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணி முதல் 7.30 மணி வரை நடைபெறும் வெள்ளோட்டத்தில் பக்தர்கள் கலந்து கொள்ளுமாறு கோயில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !