உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலையை சுற்றி சாலை பணி: சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு அனுமதி!

திருமலையை சுற்றி சாலை பணி: சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு அனுமதி!

திருப்பதி: திருமலையை சுற்றி அமைக்கப்பட்டு வரும், வெளிவட்ட சாலையில், மூன்று மற்றும் நான்காம் கட்ட பணி துவங்க, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு அனுமதி அளித்துள்ளது. திருமலையை சுற்றி, பல கட்டுமானப் பணி நடந்து வருவதால், இயற்கை சூழ்நிலையில் மாறுதல் ஏற்பட்டுள்ளதாக பல புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி, சுற்றுச்சூழல் நிபுணர் ஆன்சிரெட்டி தலைமையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர், தேவஸ்தான் அதிகாரிகளுடன் இணைந்து, திருமலையை சுற்றி கட்டப்பட்டு வரும் கட்டட பணிகளால் இயற்கை சூழ்நிலை மாறுதல் குறித்து, நான்கு நாட்களுக்கு ஆய்வு நடத்தினர். இந்த ஆய்விற்கு பிறகு, திருமலையில், மூன்றாம் மற்றும் நான்காம் கட்ட, வெளிவட்ட சாலை பணி துவங்கவும், பக்தர்களுக்கு வாடகை அறைகள் கட்டுவதற்கும், வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்கவும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு அனுமதி அளித்துள்ளது. இத்தகவலை, திருமலை - திருப்பதி திருமலை தேவஸ்தான இணை செயல் அதிகாரி சீனிவாச ராஜு நேற்று தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !