உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விவேகானந்தரின் ரதத்திற்கு திருக்கோவிலூரில் வரவேற்பு

விவேகானந்தரின் ரதத்திற்கு திருக்கோவிலூரில் வரவேற்பு

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் வந்த விவேகானந்தர் ரத யாத்திரையை பள்ளி மாணவர்கள் வரவேற்று வணங்கினர். சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்தநாளையொட்டி ரத யாத்திரையை கோவை ராமகிருஷ்ண மடம் சார்பில் தமிழகம் முழு வதும் ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று மதியம் 12ம் மணிக்கு அரகண்டநல்லூர் வந்த ரதயாத்திரைக்கு லஷ்மி வித்யாலயா பள்ளி நிர்வாகி ராஜாசுப்ரமணியம் தலைமையில் மாலையணிவித்து வரவேற்பு அளித்தனர். மணம்பூண்டி விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் மழையையும் பொருட்படுத்தாமல் மாணவர்கள் உற்சாகத்துடன் ரதத்தை வரவேற்றனர். ஞானானந்தா நிகேதன் நிர்வாகி நித்யானந்தகிரி சுவாமிகள் விவேகானந்தரின் சிலைக்கு கற்பூரம் ஏற்றி, மலர் தூவி வழிபாடு செய்தார். பள்ளி நிர்வாகி முருகன் கலந்து கொண்டனர்.சந்தப்பேட்டை வித்யாமந்திர் பள்ளியில் செயலாளர் ஏழுமலை மாலையணிவித்து வரவேற்றார். திருக்கோவிலூர் இன்ஸ்பெக்டர் மகேஷ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !