உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடையம் கோயிலில் திருக்கல்யாண விழா

கடையம் கோயிலில் திருக்கல்யாண விழா

ஆழ்வார்குறிச்சி: கடையம் கைலாசநாதர் பஞ்சகல்யாணி அம்பாள் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா நடந்தது. கடையம் வட்டாரத்தில் முதல் நாள் சிவசைலம் சிவசைலநாதர் பரமகல்யாணி அம்பாள் திருக்கல்யாண விழாவும், அடுத்த நாள் வில்வவனநாதர் நித்யகல்யாணி அம்பாள் கோயிலிலும், தொடர்ந்து மறுநாள் கைலாசநாதர் பஞ்சகல்யாணி அம்பாள் கோயிலிலும் திருக்கல்யாண விழா நடந்தது. கைலாசநாதர் பஞ்சகல்யாணி அம்பாள் கோயிலில் நடந்த திருக்கல்யாண விழாவில் கும்ப பூஜை, தொடர்ந்து சிறப்பு தீபாராதனையும், மாங்கல்ய தானமும், திருக்கல்யாணமும் நடந்தது. கடையம் வில்வவனநாதர் திருவாசகம் முற்றோதுதல் குழு தலைவர் பணிநிறைவு தாசில்தார் கல்யாணசுந்தரம் சிறப்பு தேவார பாடல்கள் பாடினார். பின்னர் சிறப்பு பூஜைகள் நடந்தது. திருக்கல்யாண விழாவில் சுற்று வட்டார பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !