திருத்தணியில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
ADDED :4392 days ago
திருத்தணி: சுப்ரணியசுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கொடியேற்றத்துடன் வெகுவிமரிசையாக திங்கள்கிழமைத் தொடங்கியது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். முதல் நாள் விழாவில் காலை 10 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அலங்காரமும் அதைத் தொடர்ந்து புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.