வீரசக்தி விநாயகருக்கு தங்க கவசம் அணிவிப்பு!
ADDED :4389 days ago
காரைக்கால்: கோவில்பத்த வீரசக்தி விநாயகருக்கு ரூ.4 லட்சம் மதிப்பில் தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. காரைக்கால் கோவில்பத்து வீரசக்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி மற்றும் ஆடி வெள்ளி நாட்களில் லட்சார்ச்சனை சிறப்பாக நடைபெற்று வருகிறது. கோவில் நிர்வாகம் சார்பில் வீரசக்தி விநாயகருக்கு புதிதாக ரூ.4 லட்சம் மதிப்பில் தங்க கவசம் செய்யப்பட்டுள்ளது. இந்த தங்கக் கவŒம் வீரசக்தி விநாயகருக்கு @நற்று அணிவிக்கப்பட்டது. அதையொட்டி, சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சியில் பக்தர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.