உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோழவந்தான் கோயிலில் கந்த சஷ்டி விழா!

சோழவந்தான் கோயிலில் கந்த சஷ்டி விழா!

சோழவந்தான்: சோழவந்தான் தென்கரை அகிலாண்டேஸ்வரியம்மன், மூலநாதர் சுவாமி கோயிலில், கந்தசஷ்டி திருவிழா, நவ.,9 ல் திருக்கல்யாணம் நடக்கிறது. இக்கோயிலில், சுப்பிரமணியசுவாமி, வள்ளி, தெய்வானையுடன் அமைந்த சன்னதி உள்ளது. கந்த சஷ்டியை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை காப்புகட்டும் நிகழ்ச்சி நடந்தது. நவ.,8ல் மாலை 4.30 மணிக்கு வேல்வாங்குதலும், 5.30 மணிக்கு சூரசம்ஹாரமும் நடக்கிறது. அன்னதானம் வழங்குதல். நவ.,9ல் காலை 10 மணிக்கு சுவாமிக்கு அன்னப்பாவாடை சாத்துதல், மாலை 3.30 மணிக்கு திருக்கல்யாணம் மற்றும் வீதிஉலா நடக்கிறது. ஏற்பாடுகளை, பிரதோஷ கமிட்டி, கோயில் நிர்வாகம் செய்துள்ளது. இதுபோல், சோழவந்தான் வைகை கரையில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோயிலிலும் கந்தசஷ்டி திருவிழா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !