உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை இஸ்கானில் தாமோதர தீபத்திருவிழா!

மதுரை இஸ்கானில் தாமோதர தீபத்திருவிழா!

மதுரை: மதுரை மணிநகரம் இஸ்கான் கோயிலில் நடக்கும் தாமோதர தீபத்திருவிழாவில், பக்தர்கள் நேரடியாக சுவாமிக்கு ஆரத்தி காட்டலாம். நவ.17 வரை நடக்கும் இந்த விழா, யசோதை கிருஷ்ணரை கயிற்றால் உரலில் கட்டியதை நினைவூட்டும் விதத்தில் நடக்கிறது. கிருஷ்ணர் வளர்ந்த கோகுலத்தில் நடக்கும் தாமோதர தீபத்திருவிழாவில், அவரின் பாலபருவ விளையாடல்களான காளிங்கநர்த்தனம், நரகாசுரவதம் கோவர்த்தனகிரியை குடையாக பிடித்தது போன்றவை சிறப்பாக நடத்தப்படும். இதனையொட்டி, மதுரை இஸ்கான் கோயிலில் தினமும் மாலை 6.30 க்கு நடக்கும் தீபஆரத்தி நிகழ்ச்சியில் பக்தர்கள் நேரடியாக தீபமேற்றலாம். நவ.10,17ல் சிறப்பு பூஜை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !