வீரமுடையாநத்தத்தில் அமாவாசை சிறப்பு பூஜை
ADDED :4388 days ago
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த வீரமுடையாநத்தம் வீரசக்தி ஆஞ்சநேயர் கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை நடந்தது. சேத்தியாத்தோப்பை அடுத்த வீரமுடையாநத்தம் வீரசக்தி ஆஞ்சநேயர் கோவிலில் ஐப்பசி மாத அமா வாசையையொட்டி நேற்று முன்தினம் காலை 10.00 மணிக்கு சந்தனம், மஞ்சள், பால், தயிர், திரவியப்பொடி, தேன், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து அமாவாசை நைவேத்திய பூஜையும் நடந்தது. மாலை 6 மணிக்கு விசேஷ அலங்கார பூஜையும், 1008 நாமாவளி அர்ச்சனையும் உடன் மகா தீபாராதனையும் நடந்தது. பாலாஜி அய்யர் பூஜைகளை நடத்தினார். பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.