உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / யாரை நம்பி நான் பொறந்தேன்?

யாரை நம்பி நான் பொறந்தேன்?

தேவையில்லாமல் பயப்படுபவர்கள் உலகில் அதிகம் பெருகி விட்டார்கள். இந்த வேலை நிலைக்குமா? திட்டங்கள் செயலுக்கு வருமா? வாழ்க்கைச் சக்கரம் சீராக ஓடுமா? இப்படி பல பயங்கள் மனிதனை ஆட்டி வைக்கின்றன. தேவையில்லாமல் பயப்படுபவர்கள் கவிச்சக்கரவர்த்தி கம்பரை உதவிக்கு அழைக்கலாம். அவர் குலோத்துங்கசோழன் அவையில் புலவராக இருந்தார். ஒருசமயத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு உண்டானது. மன்னன் கம்பரை அடிமையே என இழிவாகப் பேசினான். ஆனால் கம்பர் அதற்காக சிறிதும் அஞ்சவில்லை. யாரை நம்பி நான் பொறந்தேன்? உன்னை நம்பியா இந்த தமிழைப் படித்தேன் என்னும் பொருளில், மன்னவனும் நீயோ! வளநாடும் உனதோ? உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன்? என்று சொல்லி பதவியை விட்டே விலகிவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !