கன்னிவாடி மவுனகுருசுவாமி கோயில் குருபூஜை!
ADDED :4463 days ago
கன்னிவாடி: கன்னிவாடி அருகே கசவனம்பட்டியில் உள்ள மவுனகுருசாமி கோயிலில் குருபூஜை நேற்று முன் தினம் துவங்கியது. சிவனூரணி, திருமலைக்கேணி, திருமூர்த்தி மலை, சுருளி, காசி, ராமேஸ்வரம், கொடுமுடி, சதுரகிரி உள்ளிட்ட இடங்களில் இருந்து பக்தர்கள் புனித நீர் எடுத்து வந்தனர். மாலையில் தீர்த்த அபிஷேகம் நடந்தது. நேற்று காலை விநாயகர் வேள்வியுடன் விழா துவங்கியது. திருவாசக, திருமுறை பாராயணத்துடன் 108 படி பாலாபிஷேகத்துடன் குருபூஜை நடந்தது. உற்சவ மூர்த்திக்கு தங்க கிரீடம் சாத்தப்பட்டு, விசேஷ பூஜை, மகேஸ்வர பூஜை நடந்தது. அன்னதானம், சொற்பொழிவு, பஜனை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சாதுக்கள் பங்கேற்றனர்.