சிதம்பரத்தில் இன்று சூரசம்ஹாரம்
ADDED :4351 days ago
சிதம்பரம்: சபாநாயகர் கோவில் மேலக்கோபுரம் முத்துக்குமார சுவாமி கந்த சஷ்டி மகா சூரசம்ஹாரம் இன்று நடக்கிறது. சூரசம்ஹார உற்சவம் கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று மாலை 6:00 மணிக்கு அம்பை அம்பலவாணர் சபையில் செல்வமுத்துக்குமரன் சுவாமி எழுந்தருளி சக்தி வேல் வாங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் தெற்கு வீதியில் சுவாமி எழுந்தருளி சூரசம்ஹாரம் நடக்கிறது. இரவு வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது. பாம்பன் சுவாமி மடம்: இன்று காலை மகா அபிஷேகம், கஞ்சி வார்த்தல், மகேஸ்வர பூஜை, மகா தீபாராதனையும், மதியம் 2:00 மணிக்கு தேரோட்டமும் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு திருச்செந்தூர் செந்தில் ஆண்டவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனையும், ஆறு கால பூஜைகள் நடக்கிறது.