ஆதிசேஷ செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :4350 days ago
வடமதுரை: வடமதுரை மோர்பட்டியிலுள்ள "அக்னி ஸ்கூல் ஆப் பிசினஸ் எக்ஸ்லென்ஸ் மேலாண்மை கல்லூரி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள ஆதிசேஷ செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் குருக்கள் பிச்சை, ஸ்ரீதர் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். பழனிச்சாமி எம்.எல்.ஏ., ஒன்றிய தலைவர் அழகர்சாமி, ஊராட்சித் தலைவர் வையாபுரி, காந்திகிராம பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சிவராமன், பி.எஸ்.என்.ஏ., கல்லூரி இயக்குனர் ரகுராமன், பண்ணை குரூப் கல்லூரிகளின் இயக்குனர் கார்த்திகேயன், திண்டுக்கல் சென்ட்ரல் பாங்க் மேலாளர் கண்ணன், அக்னி கல்லூரி சேர்மன் கன்னியப்பன், துணை சேர்மன் பார்த்தசாரதி, அறங்காவலர் வள்ளிநாயகி, இயக்குனர் ஞானபிரகாசம் உள்பட பலர் பங்கேற்றனர்.