உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகாலம்மன் சதுர்த்தி

நாகாலம்மன் சதுர்த்தி

ஆர்.கே.பேட்டை: நாகாலம்மன் சதுர்த்தியை ஒட்டி, புற்றுக்கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. தீபாவளிக்கு அடுத்த, ஐந்தாவது நாள், நாகாலம்மன் சதுர்த்தி கொண்டாடப்படுவது வழக்கம். இதையடுத்து, நேற்று, ஆர்.கே.பேட்டை விசாலீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள புற்றுக்கோவிலில், சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.நேற்று காலை முதல், புற்றுக்கோவிலில், கதம்ப பொடி அபிஷேகமும், பால் வார்த்தலும் நடந்தது. நாகாலம்மனுக்கு, முளை விட்ட கம்பு, வெல்லம், படைக்கப்பட்டது. திரளான பெண்கள் மாவிளக்கு ஏற்றி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !