அங்கராயநல்லூரில் கும்பாபிஷேகம்
செஞ்சி: அங்கராயநல்லூர் முத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. செஞ்சி தாலுகா அங்கராயநல்லூரில் புதிதாக 21 அடி உயர முத்து மாரியம்மன் கோவில் கட்டியுள்ளனர். ஏற்கனவே உள்ள செல்வ விநாயகர், புரடியாத்தம்மன், சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவில் களில் திருப்பணிகள் செய்து நேற்று அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் செய்தனர். இதை முன்னிட்டு கடந்த 6ம் தேதி மாலை விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேச பலி, முதல் கால யாக சாலை பூஜைகள் நடந்தது. நேற்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜைகள், மகா கணபதி மூலமந்திரம், நவக்கிரக ஹோமமும், 7.30 மணிக்கு தம்பதி சங்கல்பம், நாடிசந்தானம், விசேஷ திரவிய ஹோமம், மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. 8.30 மணிக்கு கலசம் புறப்பட்டு விநாயகர் கோவில், சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. 9 மணிக்கு முத்து மாரியம்மன் கோபுர விமானத்திற்கும். 9.10 மணிக்கு 21 அடி முத்து மாரியம்மன் சிலைக்கும் கும்பாபிஷேகம் செய்தனர். 9.30 மணிக்கு புரடியாத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. 10 மணிக்கு மூலவர் மகா அபிஷேகம், தீபாராதனை செய்தனர். இரவு 7 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது.