சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி ராஜகோபுரத்தில் செடிகள் அகற்றம்
ADDED :4350 days ago
சுசீந்திரம்: தாணுமாலைய சுவாமி கோவிலின் கோபுரத்தின் மேல்பகுதிகளில் பறவைகளின் எச்சத்தால் அரசமரச் செடிகள், ஆலமரச் செடிகள் வளர்ந்தன.இச் செடிகளை அடிக்கடி கோவில் ஊழியர்கள் அகற்றி வருகின்றனர். இந்நிலையில் கோபுரத்தில் மீண்டும் செடிகள் வளர ஆரம்பித்ததால், வியாழக்கிழமை அவற்றை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.