திருவதிகை ஸ்ரீவீரட்டானேஸ்வரர் கோயிலில் சூரசம்ஹாரம்
ADDED :4350 days ago
பண்ருட்டி: திருவதிகையில், பெரியநாயகி உடனுறை ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு முருகருக்கு தனி சன்னதி உள்ளது. இக்கோயிலில் கடந்த 3ஆம் தேதி கந்தசஷ்டி விழா தொடங்கியது. விழாவையொட்டி, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து வெள்ளிக்கிழமை முருகபெருமானுக்கு அர்ச்சனையும் மற்றும் ஆராதனையும் நடந்தேறியது. மாலை 8 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.