திருவண்ணாமலை தீப திருவிழா: பூத வாகனத்தில் சுவாமி வீதி உலா!
ADDED :4403 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா 8ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கார்த்திகை தீப விழாவில், 3ம் நாளான நேற்று, பூத வாகனத்தில் உண்ணாமலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.