திருநீலகண்டேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :4657 days ago
ஊத்துக்கோட்டை: கந்தசஷ்டி விழாவை ஒட்டி, வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமான் திருக்கல்யாண உற்சவத்தில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். ஊத்துக்கோட்டை, ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம் இரவு, சுவாமியின் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. உற்சவர் பூ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து சிறப்பு பூஜைகளுடன் சுவாமி யின் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.