உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

பொதட்டூர்பேட்டை: திரவுபதியம்மன் சமேத தருமராஜா கோவில் கும்பாபிஷேகம், வரும், ெவள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. பொதட்டூர்பேட்டை திரவுபதியம்மன் கோவிலின் சீரமைப்பு பணி, நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, வரும் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. நாளை மறுதினம், நவகிரக ஹோமம், கோ பூஜையுடன் துவங்குகிறது. தொடர்ந்து, புதிய சிலைகளின் கரிக்கோலம் நடைபெறும். காலை, 11:00 மணிக்கு, அப்பர் இறைபணி மன்றத்தினரின் பக்திமாலை நிகழ்ச்சி நடைபெறும். வியாழக்கிழமை, காலை, பிம்பசுத்தி, யந்திர ஸ்தாபனம், மஹா பூர்ணாஹூதி நடக்கிறது. ெவள்ளிக்கிழமை (நவ., 15), காலை, 8:00 மணிக்கு, யாக சாலையில் இருந்து புனிதநீர் கலசங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, கோவில் விமான கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. இரவு, 7:00 மணிக்கு, அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !