வழிவிடு முருகன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்!
ADDED :4348 days ago
மானாமதுரை: பைபாஸ் ரோட்டில் அமைந்துள்ள வழிவிடு முருகன் கோயிலில் நடந்த கந்தசஷ்டி விழா நிறைவாக சனிக்கிழமை இரவு முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு முகப்பு மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதராய் அலங்காரத்துடன் ஊஞ்சலில் எழுந்தருளினார். திருக்கல்யாணத்தை காண வந்திருந்த பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், திருமாங்கல்ய கயிறு, வளையல்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.