ரிஷபம்: பதவி உயர்வு!
சுக்கிரனை ராசிநாதனாக கொண்ட ரிஷபராசி அன்பர்களே!
ரிஷப ராசிக்கு 7ல் சூரியன் இருக்கும் காலம்தான் கார்த்திகை மாதம். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் 8ல் இருப்பதால் வசதி பெருகும். பெண்கள் ஆதரவுடன் இருப்பர். டிச.4க்கு பிறகு பொருளாதார வளம் கூடும். சூரியன் விருச்சிகத்தில் இருக்கும்போது நன்மை தராவிட்டாலும், குரு,சனி,ராகு நற்பலன் அளிப்பர். செவ்வாயால் தீமை உண்டானாலும், நவ.30க்கு பிறகு பிரச்னை தீரும். ஆனால், உடல்நலம் பாதிக்கப்படலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை.புதன் 6-ம் இடத்தில் உள்ளதால் சுப நிகழ்ச்சி நடக்கும். பதவி உயர்வு கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். நவ.28க்குப் பிறகு கணவன் மனைவி ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். சிலருக்கு மனக்கவலை வரலாம். கேது சாதகமற்ற இடத்தில் இருப்பதால் சிலரது வீட்டில் திருட்டு நடக்கலாம்.சுக்கிரன்,குருவால் விருப்பம் நிறைவேறும். டிச.8,9,10 தேதிகளில் எதிர்பாராத நன்மை உண்டாகும். மாத பிற்பகுதியில் இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. தொழிலில் ஆற்றல் மேம்படும். மாத தொடக்கத்தில் வருமானமும், பிற்பகுதியில் புதனால் விரயமும் ஏற்படலாம். டிச.13,14 தேதிகளில் சந்திரனால் தடை வரலாம். கலைஞர்கள் முன்னேற்றம் காண்பர். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். டிச.4க்குப் பிறகு பெண்களால் நற்சுகம் கிடைக்கும். பொருளாதார வளம் கூடும். அரசியல்வாதிகள் பலனை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியதிருக்கும். விவசாயிகள் கால்நடை வளர்ப்பில் நன்மை காண்பர். நெல், நிலக்கடலை, கிழங்கு வகைகள் போன்றவை நல்ல மகசூலைக் கொடுக்கும்.மாணவர்கள் வளர்ச்சி காண்பர். நவ.28க்குப் பிறகு படிப்பில் அக்கறை தேவை.பெண்களுக்கு பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். சுப நிகழ்ச்சிகள் கைகூடும். டிச.6,7 தேதிகளில் வயிறு தெடர்பான சிற்சில பிரச்னை வரலாம்.
அதிர்ஷ்ட எண்: 7,8 நிறம்: வெள்ளை, நீலம்
நல்ல நாள்: நவ.18,19,23,24,30, டிச.1,2,3,8,9,10,11,12,15
கவன நாள்: டிச.4,5 சந்திராஷ்டமம்
வழிபாடு: சூரிய வழிபாடு நடத்துங்கள். துர்க்கை வழிபாடு துயரம் போக்கி, தைரியத்தை வரவழைக்கும். புதனன்று குல தெய்வத்தை வணங்கி ஏழைகளுக்கு பாசிப்பயறு தானம் செய்யுங்கள்.