திருவந்திபுரம் ஹயக்கிரீவர் கோவிலில் பாலாலய பூஜை
ADDED :4354 days ago
கடலூர்: திருவந்திபுரம் ஹயக்கிரீவர் கோவிலில் நாளை பாலாலய பூஜை நடக்கிறது. திருவந்திபுரம் மலையில் ஹயக்கிரீவர் சன்னதி உள்ளது. கல்விக்கு உகந்த ஹயக்கிரீவர் என பக்தர்களால் அழைக்கப்படும் இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு, கோவிலில் திருப்பணிகள் துவங்க உள்ளது. இதற்காக, பாலாலயம் சிறப்பு பூஜை நாளை (14ம் தேதி) நடக்கிறது. அன்று காலை 9:00 மணி முதல், 11:30 மணி வரை, சிறப்பு ஹோமங்கள், பூஜைகள், தீபாராதனைகள் நடக்கிறது.