கோயிலில் தங்கத்தேர் வரும் போது, தேர்மீது காசுகள் வீசி எறிவது பற்றி...?
ADDED :4458 days ago
ஆசை யாரை விட்டது! அந்த தங்கம் போல், வீட்டிலும் தங்கம் குவிந்து விடாதா என்ற ஆசை தான்! கடவுள் நம்மிடம் தங்கத்தேர் கேட்கவில்லை. அன்பின் காரணமாக நாமாக செய்து, அவரை பவனி வரச்செய்கிறோம். இதில் பக்தி தான் முக்கியமே தவிர, தங்கம் முக்கியமல்ல. காசுகளை உண்டியலில் போட இனியாவது கற்றுக் கொள்ளுங்கள். கோயில் பராமரிப்பு செலவுக்கு உதவும்.