உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம்!

திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம்!

பண்ருட்டி: பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் 15ம்தேதி நடக்கிறது. பண்ருட்டி திருவதிகையில் பழமைவாய்ந்த அப்பர் பெருமானால் பாடல் பெற்ற முதல் கோவிலான அம்பாள் பெரியநாயகி சமேத வீரட்டானேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் 15ம்தேதி நடக்கிறது. மற்ற சிவதலங்களில்  ஆண்டுதோறும் ஐப்பசிமாதம் அஸ்வினி நட்சத்திரத்தில் அன்னாபிஷேகம் நடைபெறும். ஆனால் இந்த கோவிலில் மட்டும் ஆண்டு தோறும் ஐப்பசிமாதம் அஸ்வினி நட்சத்திரத்தில் திருமூலர் குருபூஜை நடைபெறும் நாட்களில் மட்டுமே அன்னாபிஷேகம் நடத்துவது வழக்கம் அதன்படி அன்னாபிஷேகம் நடக்கிறது. விழாவை முன்னிட்டு காலை 10:00 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ்வரர், அம்பாள், விநாயகர், வள்ளி தெய்வானைமுருகர், சண்டிகேஸ்வரர், நவக்கிரக சுவாமிகளுக்கு(பஞ்சமுக சுவாமிகள்) சிறப்பு அபிஷேகம் நடந்து பிற்பகல் 12:00 மணியளவில் தீபாராதனை நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு எட்டு பட்டைகள் கொண்ட மூலவர் வீரட்டானேஸ்வரர் சுவாமிக்கு அன்னம் மற்றும் காய்கறி, பழங்களால் அலங்காரம் செய்து சிறப்பு பூஜை நடக்கிறது. திலகவதியார் கோவில் அருகில் உள்ள சரக்கொன்றைநாதர் சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடக்கிறது. இரவு 8:00 மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது. வருகிற 17ம்தேதி பவுர்ணமியை முன்னிட்டு மாலை 6:00 மணிக்கு மாட வீதி வலம் வருதல், இரவு 7 :00 மணிக்கு உற்சவர் அம்பாள் பெரியநாயகி ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !