உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புத்தகயா கோவிலுக்கு 300 கிலோ தங்கம்!

புத்தகயா கோவிலுக்கு 300 கிலோ தங்கம்!

பாட்னா: பீகார் மாநிலம், புத்தகயாவில் உள்ள மகாபோதி கோவிலின் கோபுரத்திற்கு தங்க தகடுகள் வேய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, தாய்லாந்து நாட்டு பக்தர்கள் 300 கிலோ தங்கத்தை நன்கொடை செய்துள்ளனர். இந்த தங்க கட்டிகள், 13 பெட்டிகளில் அடைக்கப்பட்டு, தனி விமானம் மூலம் பாங்காக்கில் இருந்து எடுத்து வரப்பட்டது. பாதுகாப்பிற்கு அதிரடி படையினர் உடன் வந்தனர். மேலும், புதிய தொழில்நுட்பத்தின் கீழ் தங்க தகடுகள் பதிக்க தொழில்நுட்ப வல்லுனர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர். அடுத்த இரண்டு மாதங்களுக்குள் மகாபோதி கோவில் கோபுரம், தங்க கோபுரமாக ஜொலிக்க போகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !