உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை மஹா தீபம் ஏற்ற கொப்பரை தயார்!

திருவண்ணாமலை மஹா தீபம் ஏற்ற கொப்பரை தயார்!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவில், கார்த்திகை தீப திருவிழாவில், மஹா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் கொப்பரை புதுப்பிக்கப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில் வரும், 17ம் தேதி, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில், மஹா தீபம் ஏற்றப்படுகிறது. மலை உச்சியில் மஹா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும், 6.5 அடி உயரமுள்ள ராட்சத கொப்பரை புதுப்பிக்கப்பட்டு, வண்ணம் பூசி, அர்த்தநாரீஸ்வரர் உருவம் பொறித்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. வரும், 16ம் தேதி, கொப்பரை, மலை உச்சிக்கு கொண்டு செல்லப்படுகிறது.அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழாவில் ஆறாம் நாளான  நேற்று வெள்ளி யானை வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார், எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !