உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உங்கள் வாழ்விற்கு நீங்களே எஜமானர்!

உங்கள் வாழ்விற்கு நீங்களே எஜமானர்!

*உங்கள் செயல்கள் மகிழ்ச்சிஅளிப்பதாய் இருக்கட்டும். ஆனால், உங்களுடைய சொந்த மகிழ்ச்சிக்காக எதையும் செய்யாதீர்கள்.
*பரபரப்பு, கலகம், பதட்டம் இவற்றைத் தவிர்த்து விடுங்கள். எந்தச் சூழ்நிலையிலும் பூரண அமைதியைக் கடைபிடியுங்கள்.
*பிறரிடம் காணப்படும்குறைகளை மாற்றும் ஆற்றல் உங்களிடம் இருந்தால் அன்றி, யாரையும் குறை சொல்ல முயலாதீர்கள்.
*உங்கள் முன் வைத்திருக்கும் லட்சியத்தை ஒருபோதும் மறந்து விடாதீர்கள். அதைநோக்கி முன்னேறும் விதத்தில் செயல்படுங்கள்.
*சொற்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள். மிக அவசியம் இருந்தால் ஒழிய பேச வேண்டாம்.
*தளராத முயற்சி உங்களுக்குள் உணர்ச்சியைத் தூண்டும். அதன் மூலம் இறை அருளாகிய திவ்ய ஒளி உங்கள் மீது படும்.
*உங்கள் வாழ்விற்கு நீங்களே எஜமானர், தலைவர் என்பதை உணருங்கள்.
*உள்ளத்து உறுதியும்,பெருமித உணர்வும் கொண்டு உங்கள் பாதையில்நடைபோடுங்கள்.
*அச்சம் நோயை விட பயங்கரமானது. ஆபத்தும் கொண்டது. அதுவேஉங்களிடமிருந்து களையப்பட வேண்டிய முதல் குறைபாடு.
*நேர்மை, பொறுமை, வலிமை இவற்றைப் பயன்படுத்தி அச்சத்தின் நிழல் கூட இல்லாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.
ஸ்ரீஅன்னை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !