சிவகங்கை அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :4399 days ago
சிவகங்கை: விராமதியில் நவனிக்காட அய்யனார் கோயிலில் மஹா கும்பாபிஷேகம் ஐப்பசி 27 ஆம் நாள் அனுக்ஞை தீர்த்த பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து கணபதி ஹோமம், தீபாராதனை நடைபெற்றது. மாலையில் நவக்கிரக ஹோமமும், அஷ்டபந்தன கும்ப அலங்காரமும் நடைபெற்றது. பின்பு 1008 அஷ்டோத்திர மந்திரங்கள் முழங்க மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.