உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருத்தாசலம் வரதராஜ பெருமாள் கோவிலில் திருப்பவித்ர உற்சவம் துவக்கம்!

விருத்தாசலம் வரதராஜ பெருமாள் கோவிலில் திருப்பவித்ர உற்சவம் துவக்கம்!

விருத்தாசலம்: விருத்தாசலம் வரதராஜ பெருமாள் கோவிலில் திருப்பவித்ர உற்சவம் துவங்கியது. விருத்தாசலம் சாத்துக்கூடல் ரோடு, ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் மூன்றாமாண்டு திருப்பவித்ர உற்சவம் துவங்கியது. இதையொட்டி பெருமாள், தாயார், ஆழ்வார் சுவாமிகளுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், பன்னீர் மற்றும் திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து அனுக்ஞை, கும்பஸ்தாபனம், திவ்யபிரபந்த வேத பாராயணங்கள் துவங்கியது. காலை 9:00 மணிக்கு மேல் மணிமுக்தாற்றிலிருந்த கடம் புறப்பாடு, 10:30 மணிக்கு சதுஸ்தான ஹோமங்கள், 91 திருவாராதனம் பாராயணங்கள் நடந்தது. பகல் 12:00 மணிக்கு சாற்றுமுறை, மாலை 6:00 மணிக்கு முதல்கால ஹோமங்கள், சுவாமி புறப்பாடு நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். நாளை 17ம் தேதி காலை உதய கருடசேவை புறப்பாடு, ஹோமங்கள், அலங்கார திருமஞ்சனம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !