உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை 8ம் நாள் திருவிழாவில் சந்திரசேகரர் பவனி!

திருவண்ணாமலை 8ம் நாள் திருவிழாவில் சந்திரசேகரர் பவனி!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவின், எட்டாம் நாளான நேற்று, அண்ணாமலையார், உண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, திருக்கல்யாண மண்டபத்தில் இருந்து புறப்பட்ட விநாயகர், சந்திரசேகரர், 3ம் பிரகாரத்தை வலம் வந்து, திட்டி வாசல் வழியாக அலங்கார மண்டபத்தில் காலை, 11 மணிக்கு எழுந்தருளினர். மூஷிக வாகனத்தில் விநாயகரும், குதிரை வாகனத்தில் சந்திரசேகரரும் மாட வீதியில் பவனி வந்தனர். மாலை, 4 மணிக்கு பிச்சாண்டவர் உற்சவம் நடந்தது. இரவு முஷிக வாகனத்தில் விநாயகரும், குதிரை வாகனங்களில் சுப்பிரமணியர், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் தனித்தனியாக வீதி உலா வந்தனர். தீப திருவிழாவில், மஹா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நாளை (17ம் தேதி) நடக்கிறது. இதையொட்டி, திருவண்ணாமலை நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழாவில் 2,668 உயரம் உள்ள அண்ணாமலையார் மலை மீது ஏற்றப்படும் மகா தீபத்திற்கு திரியாக பயன்படுத்தப்படும், 1000 மீட்டார் கடா  துணியுடன் பக்தர்கள் கோவில் உள்பிரஹாரகம் சுற்றி வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !