ராமேஸ்வரம் கோயில் பிரகாரம் புதுப்பிப்பு!
ADDED :4398 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம், ராமநாத சுவாமி கோவிலில், அடுத்தாண்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால், பழமை மாறாமல் முதல் பிரகார தூண்கள், சிற்பங்களை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னிதியில், இப்பணி, 50 லட்ச ரூபாயில் நடந்து வருகிறது. ரசாயனம் கலந்த தண்ணீரை தூண்கள், சிற்பங்களில் தடவி, அதை தண்ணீரால் பீய்ச்சி அடித்து தூசி, அழுக்குகள் கற்றப்படுகிறது. இப்பணி முடிந்த பின், தூண்கள், சிற்பங்களில் வார்னிஷ் பூச உள்ளனர். "ஏழு மாதங்கள் வரை, இப்பணி தொடரும் என, இப்பணியில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த ஊழியர்கள் தெரிவித்தனர்.