உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஞானதண்டாயுதபாணி கோவிலில் மகாதீப ஜோதி விழா

ஞானதண்டாயுதபாணி கோவிலில் மகாதீப ஜோதி விழா

உடுமலை: உடுமலை பாப்பன்குளம் ஞானதண்டாயுதபாணி கோவிலில், மகாதீப ஜோதி விழா நாளை 17 ம் தேதி நடக்கிறது. விழாவையொட்டி, பகல் 11.30 மணிக்கு மூலவர் அபிஷேகம், ராஜ அலங்காரம், மகாதீபாராதனையும், மாலை 5:30 மணிக்கு உற்சவர் அபிஷேகமும், மாலை 6:30 மணிக்கு மகா தீப ஜோதி தரிசன நிகழ்ச்சியும் நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு திருவீதியுலா நிகழ்ச்சி நடக்கிறது. இதே போல், உடுமலை சுற்றுப்பகுதி கோவில்களில், கார்த்திகை தீபத்தையொட்டி, ஜோதி விழா நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !