உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்துறைப்பூண்டியில் கிருஷ்ணருக்கு துளசி பூஜை வழிபாடு

திருத்துறைப்பூண்டியில் கிருஷ்ணருக்கு துளசி பூஜை வழிபாடு

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில், இஸ்கான் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் சார்பில், தாமோதர திருவிழா, துளசி பூஜை நடந்தது. இதில், தாம் என்றால் கயிறு, உதிர என்றால் வயிறு ஆகும். ஸ்ரீ பகவான் கிருஷ்ணரை, உரலில் வைத்து கயிறால் யசோதை கட்டியதால் ஸ்ரீ கிருஷ்ணருக்கு தாமோதரன் என, பெயர் வந்தது. காதுர் மாதம் முக்கியமானது. அதில், குறிப்பாக தாமோதர மாதம் எனப்படும், இம்மாதம் ஸ்ரீ கிருஷ்ணருக்கு மிகவும் இஷ்டமான மாதமாகும். அக்., மாதம் 18ம் தேதி முதல் நவ., 16ம் தேதி வரை மாலை நேரத்தில் ஸ்ரீ கிருஷ்ணருக்கு நெய்தீப ஆரத்தி செய்வது சிறப்புடையது. இதையொட்டி, திருத்துறைப்பூண்டியில், கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில், கடந்த, 14ம் தேதி மாலை 6 மணிக்கு துளசி பூஜை, 7 மணிக்கு ஆரத்தியும் நடந்தது. தொடர்ந்து, ஸ்ரீ பகவத் கீதை சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. இதில், பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர்.இதற்கான, ஏற்பாட்டை இஸ்கான் அமைப்பினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !