உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம்

மாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம்

காரிமங்கலம்: காரிமங்கலம் அடுத்த காளப்பனஅள்ளி பஞ்சாயத்து, கீரியூரில் மாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி, நேற்று முன்தினம் மாலை, 4 மணிக்கு கணபதி பூஜை, புன்னியாவசமும், சந்திர சூரிய பூஜை, யாகசாலை பிரவேசம், கோ பூஜை, வாஸ்துசாந்தி, பூர்ணாஹுதி நடந்தது. நேற்று அதிகாலை, 12 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல், 2.30 மணிக்கு கணபதி, நவக்கிரக, திக் மற்றும் மாரியம்மன் தேவதை ஹோமங்கள், பூர்ணாஹுதி நடந்தது. காலை, 6.30 மணிக்கு மேல், 8.15 மணிக்குள் மஹா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு மஹா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, பூஜைகள் நடந்தது. 10 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. எம்.எல்.ஏ.,க்கள அன்பழகன், நஞ்சப்பன், பஞ்சாயத்து தலைவர் ராஜா, ஒன்றிய கவுன்சிலர் லட்சுமணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !