பவானி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :4349 days ago
பவானி: பவானி, ஊமாரெட்டியூரில் மிக பழமை வாய்ந்த ஸ்ரீசுந்தர விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. பவானி, அம்மாபேட்டை யூனியனுக்கு உட்பட்ட ஊமாரெட்டியூரில் உள்ள பழமையான சுந்தரவிநாயகர் கோவிலில் திருப்பணிகள் முடிந்து, ஆகம முறைப்படி யாக சாலை பூஜைகள் நடந்தது. காவிரியில் புனிதநீர் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து, முதல்கால யாக பூஜை மற்றும் இரண்டாம் கால பூஜை செய்யப்பட்டு, கருவறை விமானத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ள கலசம், ஸ்ரீசுந்தரவிநாயகருக்கும் புனிதர் நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர், சுந்தரவிநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து மஹா தீபாராதனை நடந்தது. அம்மாபேட்டை பேரூராட்சி தலைவர் செந்தில்குமார், அம்மாபேட்டை ஒன்றியசெயலாளர் சரவணபவா, பேரூராட்சி துணைத்தலைவர் சுந்தரராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.