உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரட்டானேஸ்வரர் கோவிலில் உலக நன்மைக்காக சண்டி ஹோமம்!

வீரட்டானேஸ்வரர் கோவிலில் உலக நன்மைக்காக சண்டி ஹோமம்!

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் உலக நன்மைக்காக சண்டிஹோமம் நடந்தது. திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் உலக நன்மைக்காக சண்டி ஹோமம் நடந்தது. 14ம் தேதி மாலை 6 மணிக்கு கணபதி பூஜை, 64 பைரவ பூஜை, ஹோமம், சண்டி கலசஸ்தாபனம் நடந்தது. நேற்று காலை 9 மணிக்கு ஹோமம் துவங்கியது. பரமத்தி வேலூரை சேர்ந்த லீலாதேவி குடும்பத்தினர் அம்பாலுக்கு தங்கத்தாலான காதில் அணிவிக்கப்படும் ஸ்ரீ சங்க தாடங்கத்தை சமர்பித்தனர். பூஜையில் வைக்கப்பட்டு சிறப்பு ஹோமங்கள் நடந்தது. கடம் புறப்பாடாகி சிவானந்தவள்ளிக்கு கலசாபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் புதிய ஸ்ரீ சங்கதாடங்கத்தை அம்பாலுக்கு அணிவித்து தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !