அரவிந்தர் ஆசிரமத்தில் அன்னை நினைவு நாள்!
ADDED :4446 days ago
புதுச்சேரி: அன்னையின் நினைவு நாளை முன்னிட்டு, அரவிந்தர் ஆசிரமத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். புதுச்சேரியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்தில், அன்னை பிறந்த நாள் மற்றும் நினைவு நாட்களில், அவர் தங்கியிருந்த அறை, பொதுமக்களின் தரிசனத்திற்காக திறந்து விடப்படும். அன்னையின் நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, ஆசிரமத்தில் அன்னை பயன்படுத்திய அறை, பொது மக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள், அன்னை தங்கியிருந்த அறையை, நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். நினைவு தினத்தை முன்னிட்டு, ஆசிரமத்தில் கூட்டு தியானமும் நடந்தது.