உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலையில் தினமலர் தகவல் மையம் திறப்பு!

சபரிமலையில் தினமலர் தகவல் மையம் திறப்பு!

சபரிமலை: சபரிமலை சன்னிதானத்தில், "தினமலர் தகவல் மையம், நேற்று திறக்கப்பட்டது. கேரள மாநிலம், சபரிமலை சன்னிதானத்தில், மாளிகைப்புறம் கோவில் எதிரில், "தினமலர் தகவல் மையம் அமைந்துள்ளது. தமிழகத்தில் இருந்து செல்லும் பக்தர்களுக்கு உதவி செய்யும் வகையில், இம்மையம் செயல்படுகிறது. பூஜை நேரம், நடை திறந்து அடைக்கும் நாட்களின் விவரங்கள், ரயில், பஸ் நேரம், காலநிலை போன்ற விவரங்களை, இம்மையத்தில் பக்தர்கள் தெரிந்து கொள்ள முடியும். 20 ஆண்டுகளாக, இச்சேவையில், "தினமலர் நாளிதழ் ஈடுபட்டுள்ளது. மையத்தை, திருவிதாங்கூர் தேவசம்போர்டு உறுப்பினர் சுபாஷ்வாசு, குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். தேவசம்போர்டு மக்கள் தொடர்பு அலுவலர் முரளிதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சேவை மையத்தை, 04735 - 202 377, 094962 02764 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !