வட மாநிலங்களில் பவுர்ணமி வழிபாடு!
ADDED :4380 days ago
மொரதாபாத்: நேற்று கார்த்திகை பவுர்ணமியை முன்னிட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. வட மாநில மக்கள், கங்கையில் புனித நீராடி சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டனர். உத்தர பிரதேச மாநிலம் மொரதாபாத்தில், ஏராளமான பக்தர்கள் கங்கை நதியில் புனித நீராடினர். பக்தர்களின் வசதிக்காக, டில்லி - மொரதாபாத் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், அசம்பாவிதங்களை தவிர்க்க, ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.