கார்த்திகை தீப திருவிழா: அரியலூரில் கோலாகலம்
ADDED :4376 days ago
அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில், கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலமாக நேற்று நடந்தது. பெரிய கார்த்திகை எனப்படும் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, நேற்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான வீடுகளில், பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள், அகல் விளக்குகளாலான தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர். மேலும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சைவ மற்றும் வைணவ கோவில்களும், தீப ஒளியில் பிரகாசமாக காட்சியளித்தது. மேலும் "சிவபெருமான் ஜோதி வடிவானவர் என்ற தத்துவத்தை விளக்கும் வகையில், நேற்று மாலை, ஏழு மணிக்கு, அரியலூர் மாவட்டத்தில் உள்ள பல கோவில்களிலும், சொக்கப்பனை எனப்படும் சொக்கட்டான் கொளுத்தப்பட்டது.* கார்த்திகை மாத முதல் நாளான நேற்று, அரியலூர் மாவட்டத்திலிருந்து சபரிமலை செல்லும் பக்தர்கள் பலரும், மாலை அணிந்து விரதம் துவக்கினர்.