உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வால்பாறை ஐயப்ப சுவாமி கோவிலில் மண்டல பூஜை துவக்கம்!

வால்பாறை ஐயப்ப சுவாமி கோவிலில் மண்டல பூஜை துவக்கம்!

வால்பாறை :வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவில் ஐயப்ப சுவாமிக்கு, மண்டல பூஜை துவங்கியது. சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள ஐயப்ப சுவாமிக்கு, ஆண்டு தோறும் மண்டல பூஜைத்திருவிழா, அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் சார்பில், கொண்டாடப்பட்டு வருகிறது. கார்த்திகை முதல் நாளான நேற்றுமுன்தினம் மாலை, அகிலபாரத ஐயப்ப சேவா சங்கத்தலைவர் மூர்த்தி தலைமையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !